நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை, அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை, அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி
X

பூந்தமல்லியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்தார்.

நீட் தேர்வில் விலக்கு பெறுவதே தமிழக அரசின் பிரதான கொள்கை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பூந்தமல்லியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற. நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேட்டி அளித்த போது கூறியதாவது :-

நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி போடும் பணி இன்று முறையாக தொடங்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின் படி குழந்தைகளுக்கு 3 தவனையாக இந்த தடுப்பூசி போடப்படும். ஒவ்வொடு குழந்தைக்கும் ரூ. 12 ஆயிரம் செலவில் 9.23 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

இந்திய அளவில் ஆண்டு தோறும் 12 லட்சம் குழந்தைகள் இந்த நோயினாஇறக்கிறார்கள். தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்து பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விற்கு மாணவர்கள் தாயாராவது தவறானது அல்ல. நீட் தேர்வில் விலக்கு பெற்று தருவது திமுகவின் பிராதான கொள்கை .

இதற்காக முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்த போது வலியுருத்தினார். ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு கேட்டு போராடி வருகிறது.

நீதியரசர் எ.கே. ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து அறிக்கை தயாரிக்க 83 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்கள் கருத்துக்கு விரோதமாக பாஜக துணைத் தலைவர் வழக்கு போட்டுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு வந்துவிட்டால் மாணவர்கள் பாதிக்கபட கூடாது என்பதற்காக பயிற்சி மையம் செயல்படும். மாணவர்களுக்கு பக்க பலமாக தமிழக அரசு இருக்கும்.

நீட் தேர்வு சட்டப் போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீட் தேர்வு வந்துவிட்டால் மாணவர்களுக்கும் , பெற்றோருக்கும் அது சங்கடமாக அமைந்து விடும். அதனால் மாணவர்கள் நீட்தேர்விற்கு படித்துக் கொண்டு தான் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!