பொன்னேரி அருகே மகாலட்சுமி கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு திருவிளக்கு பூஜை!

பொன்னேரி அருகே மகாலட்சுமி கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு திருவிளக்கு பூஜை!
X
பொன்னேரி அருகே பஞ்செட்டி மகாலட்சுமி கோவிலில் தை வெள்ளிக்கிழமை முன்னிட்டு108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பஞ்செட்டி மகாலஷ்மி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள மகாலஷ்மி அம்மன் கோவிலில் தைவெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அகத்தீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், இளநீர், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்ட அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பின்னர் அங்கிருந்து பெண்கள் திருவிளக்கேந்தி வர பக்தர்கள் புடைசூழ பஞ்சேஷ்டி தேவி கோவில் வழியாக அம்பாள் மகாலஷ்மி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தார்.இதை தொடர்ந்து மகாலஷ்மி அம்மன் ஊஞ்சலில் கம்பீரமாய் வீற்றிருக்க சிவாச்சார்யார்கள் வேதமந்திரம் ஓத உலக நன்மையை வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், கிராம மக்களின் சவுபாக்கியத்தை மனதில் கொண்டு பெண்கள் அம்பாளை வேண்டி பூஜை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு தீப,தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது பூஜையின் முடிவில் அனைவருக்கும் குங்கும, மஞ்சள், பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த திருவிளக்கு பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!