மீஞ்சூர் அருகே நடைப்பயிற்சி செய்த பெண்ணை கடித்த தெருநாய்கள் !
மீஞ்சூர் அருகே நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்ணை தெரு நாய்கள் கடித்ததில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண். இவர் அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (வயது 30). இவர் தினமும் அதிகாலையில் அவர் வசிக்கும் பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அதேபோன்று இன்று காலை நடைபயிற்சியில் ஈடுபடும்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த சில தெரு நாய்கள் இவரை திடீரென வழிமறித்து கடிக்க வந்துள்ளன. நாய்க்கு பயந்து ஓடியும் அவரை விடாது கடித்ததால் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை நடைபயிற்சி செய்து கொண்டிருந்த பெண்ணை தெருநாய்கள் சேர்ந்து கடிப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேகமாக ஓடி வந்து பெண்ணை சுற்றியிருந்த தெரு நாய்களை விரட்டி விட்டனர். உடனடியாக அவரை மீட்டு, மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். மீஞ்சூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண், மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகன்யாவை கை, கால், முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் ஒன்று கூடி கடித்ததில் பலத்த காயங்களுடன் தான் உயிர் தப்பியதாக கூறுகிறார். மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுகன்யாவின் கணவர் சாய் கிரண் ஊராட்சி நிர்வாகத்துக்கு நாய்களைக் கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்பகுதியில் திரளான தெருநாய்கள் சுற்றி வருவதாக தெரிவித்த அவர், தங்களது பகுதி மக்கள் வெளியில் வரும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடுகின்றன, இவற்றை அவசியம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
தகவலுக்காக:
தெருநாய்கள் ஒரு நகரத்தின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அவை நோய்களை பரப்பும், குப்பையைக் குவிக்கும், மற்றும் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. எனவே, தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
தெருநாய்களைப் பிடித்து, மீண்டும் தெருவில் விடாமல் வளர்ப்புக்கு வழங்குதல்: இதுவே தெருநாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும். தெருநாய்களைப் பிடித்து, அவற்றுக்குத் தேவையான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அவற்றை வளர்ப்புக்கு வழங்கலாம்.
தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துதல்: தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், புதிய தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
தெருநாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குதல்: தெருநாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதன் மூலம், அவை உணவுக்காக மோதல்களில் ஈடுபடாமல் தடுக்கலாம்.
தெருநாய்களுக்கு மனிதனுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் பயிற்சி அளித்தல்: தெருநாய்களுக்கு மனிதனுக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் பயிற்சி அளிப்பதன் மூலம், அவை மக்களுக்கு அச்சுறுத்தலாகாமல் இருக்கலாம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் முடியும்.
இந்த வழிமுறைகளைத் தவிர, மக்களின் மனப்பான்மையிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம். தெருநாய்களைக் கண்டு பயப்படாமல், அவை ஒரு உயிரினம் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவது போன்ற உதவிகள் செய்ய வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu