காரனோடையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

காரனோடையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
X
சோழவரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் காரனோடையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார் ஒன்றிய செயலாளர் கார்மேகம்.

சோழவரம் அடுத்த காரனோடையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.நிர்வாகிகள் திரளாக பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சோழவரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக நிறுவனரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்களது தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எம்ஜிஆர் புகழ் பரப்பும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது.சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் நாகவேல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கார்மேகம் பங்கேற்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதை தொடர்ந்து 300.க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இதேபோல சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதில் மாவட்ட அணி நிர்வாகிகள் வழக்கறிஞர் குணசேகரன், வழக்கறிஞர் பாலமுருகன், தேவனேரி மாரி ஒன்றிய அணி நிர்வாகிகள் முனிகிருஷ்ணன், வேல்முருகன், வெங்கடேசன், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்