விஜய் நடித்த வாரிசு-அஜித் நடித்த துணிவு: படங்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

விஜய் நடித்த வாரிசு-அஜித் நடித்த துணிவு:  படங்களுக்கு ஆரத்தி எடுத்து  வரவேற்பு
X

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ரோகிணி வெங்கடேஸ்வரா திரையரங்கில் குவிந்த ரசிகர்கள்

பெரியபாளையத்தில் ஒரே திரையரங்க வளாகத்தில் 2 படங்களும் வெளியானதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

தமிழகம் எங்கும் இன்று விஜய் நடித்துள்ள வாரிசு அஜித்குமார் நடித்துள்ள துணிவு படம் வெளியானதை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ரோகிணி வெங்கடேஸ்வரா திரையரங்கில் இன்று விடியற்காலை 4 மணி அளவில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் அஜித் நடித்துள்ள துணிவு படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய் கட்டப்பட்டிருக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து, சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதேபோல் அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இன்று வெளியானதை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பாலாபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதே போல் இத்திரைப்படம திருவள்ளூர், திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் திரையரங்குகளில் இந்த இரண்டு படங்களும் இன்று வெளியிட்டதை முன்னிட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பெரியபாளையத்தில் ஒரே திரையரங்க வளாகத்தில் இரண்டு படங்களும் வெளியானதை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே எவ்வித மோதல்கள் பிரச்னைகள் ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags

Next Story
ai in future agriculture