டயர் தொழிற்சாலையில் திடீர் கரும் புகை - கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பரபரப்பு!

டயர் தொழிற்சாலையில் திடீர் கரும் புகை -  கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பரபரப்பு!
X
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பழைய டயர் தொழிற்சாலையில் திடீர் கரும்புகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பழைய டயர் தொழிற்சாலையில் வால்வு பழுதானதால் திடீர் கரும்புகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் தொழில்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்குகிறது இந்த தொழிற்சாலைகளில் பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கு பெரும்பாலான இரும்பு உருக்காலை, மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் ஏற்கனவே கருப்பு துகள்கள் வெளியேறி சுற்று உள்ள கிராமப்புறங்களில் துகள்கள் படிந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருவது வழக்கமாகி உள்ளது.இந்த நிலையில் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட தனியார் பழைய டயர் அரைத்து எண்ணெய் மற்றும் கருப்பு துகள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென கருப்பு துகள்களுடன் வெளியேறி சிப்காட் பகுதியில் எல்லாம் புகை மண்டலமாக மாறியது.இதை அறிந்த சிப்காட் தீயணைப்பு துறையைச் அதிகாரி முத்து தலைமையில் 5.பேர் கொண்ட குழு சுமார் ஒரு மணி நேரம் நேரம் போராடி தொழிற்சாலை வெளியேறும் கருப்பு துகள்களை தண்ணீர் உடன் ஆக்சிஜன் வாயு அடித்து அணைத்தனர்.

இது குறித்து சிப்காட் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தொழிற்சாலையில் உள்ள வால்வு பழுதானதால் அதிலிருந்து வெளியேறும் கருப்பு துகள்கள் என்பது வெளியேறியது என்றும். இதனால் இதில் பணிபுரிந்த 8.பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்றும் தெரியவந்தது.மேலும் இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story