சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!
X
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில்105 ஜீவசமாதி நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சீரடி சாய்பாபா 105.ஆவது மகா ஜீவசமாதி அடைந்த நாளை முன்னிட்டு பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு 105.பெண்கள் திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

விஜயதசமி அன்று சீரடி சாய்பாபா மகா ஜீவ சமாதி அடைந்து 105.ஆண்டுகள் ஆகிறது. இந்த நாளை உலகமெங்கும் உள்ள சாய்பாபா பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருந்து பாபாவை வழிபட்டு வருவது வழக்கம்.

இதை முன்னிட்டு நேற்று சாய் பாபாவின் 105.ஆவது மகா ஜீவசமாதி அடைந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ சாயி சீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை உலக மக்கள் நன்மை வேண்டி ஆலய வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை, சாய்பாபாவின் பரிபூரண அருள் வேண்டி மகா சங்கல்பம், தொடர்ந்து கணபதி ஹோமம், சீரடி சாய்பாபா ஹோமம், தன்வந்திரி, சுதர்சன ஹோமம், சாய்பாபா மூல மந்திர ஹோமம், ஆயுள் அபிவிருத்தி வேண்டி ஆயிஸ் ஹோமம், உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றது.

பிற்பகல் 12 மணி அளவில் கலச அபிஷேகம் பின்னர் கோயிலுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களின் கரங்களால் மூலவர் சாய்பாபாவிற்கு பாலபிஷேகம், செய்தனர்.

தொடர்ந்து பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் திரு ஆபரணங்களால், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஆரத்தி நடைபெற்றது. இந்த ஆரத்தி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவின் பஜனை பாடல்கள் ஆரத்தி பாடல்கள் பாடினார். தொடர்ந்து ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 6. மணி அளவில் பல்லாக்கு சேவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை7.மணி அளவில் ஆலய வளாகத்தில் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த திருவிளக்கு பூஜையில் 105 பெண்கள் கலந்துகொண்டுபூஜை நடைபெற்றது. பின்னர் திரு விளக்குகளை கையில் ஏந்தி ஆலயத்தின் சுற்றி வந்து ஆலயத்தில் வைத்து வழிபாடு நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிவசாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil