காவல் துணை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது..!

காவல் துணை  ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது..!
X

காவல் ஆய்வாளரை கொலை  செய்ய முயற்சித்த பரத்.

கும்மிடிப்பூண்டியில் காவல் துறை துணை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

துணை ஆய்வாளர் பாஸ்கர்-க்கு கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பஜார்,ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு, அயநெல்லூர், ஏனாதி மேல்பாக்கம், சோழியம்பாக்கம், மங்காவரம் அப்பாவரம், பட்டுப்புள்ளி, தேவம்பேடு, குருவிஅகரம், அகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துணை ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் இரவு பகல் நேரங்களில் வாகனம் தணிக்கை ஈடுபடு வழக்கம்.

அப்போது வாகனத்தணிக்கையில் இருசக்கர வாகன ஓட்டிகள் மதுபோதை மற்றும் கடத்தல் பொருட்கள் வாகனங்களில் கடத்தி கிறார்களா உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் பெத்திக்குப்பம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது திடீரென ஒரு இருசக்கர வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. அதனை துணை ஆய்வாளர் பாஸ்கர் நீண்ட தூரம் துரைத்துச் சென்று மடக்கி பிடித்துள்ளார். அப்போது வாலிபர் கத்தியை எடுத்து காவல்துறை துணை ஆய்வாளரை குத்த முயற்சித்துள்ளார்.

இதை அறிந்த பாஸ்கர் அவரை கைது செய்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பெத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பரத்(எ) என்கின்ற சிவபரத் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தியதில் இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்