கும்மிடிப்பூண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை : போலீஸ் விசாரணை
வீட்டின் பூட்டை உடைத்துக்கொள்ளை (கோப்பு படம்)
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை ரொக்க பணம் கொள்ளை போலீஸ் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம் பேடு கிராமத்தில் வசித்து வருபவர் தயாளன்(41). இவரது மனைவி சரண்யா இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் வழக்கம் போல் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றனர். மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகள் இருவரும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே தந்தை தயாளனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பூட்டு உடைக்கப்பட்டிருக்கும் தகவலைக் கூறினர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தயாளன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த ஏழு சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 25 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தயாளன் கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதுமே இதைப்போன்ற திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்தது வருகின்றன. போலீசாரும் அவ்வப்போது சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு பலரிடமும் கூறி வருகின்றனர். குற்றங்கள் பெருகி வருவதால் அருகருகே வசிக்கும் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பழகி அறிமுகமாகிக் கொள்ளவேண்டும். புதிதாக குடி வந்தாலும் கூட நாமே சென்று அறிமுகம் ஆகிக்கொள்ளலாம். ஒரு ஊர் முழுவதும் உள்ள மக்கள் ஒருவருக்கு ஒருவர் அறிந்திருப்பதுபோல நகரங்களில் வீடு கட்டி செல்லும் மக்களும் ஒருவருக்கு ஒருவர் பழகி இருந்தால் மட்டுமே அக்கம் பக்கத்தில் நடக்கும் விஷயங்களை கண்காணிப்பார்கள். யார் வந்தார்கள்? போனார்கள் என்பதற்கு ஒரு அடையாளமாவது கிடைக்கும்.
போலீசார் மட்டுமே குற்றங்களை தடுத்துவிட முடியாது. பொது மக்களும் சில அடிப்படை விஷயங்களில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்கொடுத்தால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu