புதிய மின்மாற்றி இயக்கி வைத்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்

புதிய மின்மாற்றி இயக்கி வைத்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்
X

புதிய மின்மாற்றி இயக்கி வைத்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்.

மீஞ்சூர் பேரூராட்சியில் சீரான மின் வினியோகம் செய்யும் வகையில் புதிய 6மின் மாற்றிகளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் இயக்கி வைத்தார்.

மீஞ்சூர் பேரூராட்சியில் சீரான மின் வினியோகம் செய்யும் வகையில் புதிய 6மின் மாற்றிகளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் இயக்கி வைத்தார். மும்மத வழிபாட்டுடன் மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தொடர்ந்து இப்பகுதியில் மின்தடையும், குறைந்த மின் அழுத்த மின்சாரம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதியுற்று வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டவருக்கு தொடர்ந்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்துடன் இந்த பிரச்சனை தீர்க்கும் வகையில் தற்போது பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டதன் பேரில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 3வார்டுகளில் 6 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது.

இதன் இயக்கவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய மின்மாற்றிகளை மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அனைத்து மத மக்களும் ஒற்றுமையோடு வசித்து வரும் நிலையில் மும்மத வழிபாட்டுடன் மின்மாற்றிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.10ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட திமுக அரசுக்கு மின் மாற்றிகளை ஏற்பாடு செய்து பெற்று தந்த தற்போதைய பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரனுக்கு அப்பகுதியின் பொதுமக்கள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

அப்போது பேசிய அவர் மக்கள் எவ்வித பிரச்சனைகள் இருந்தாலும் தன்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம் என்றும், அதேபோல் தொகுதியில் உள்ள தீர்க்கப்படாத எவ்வித தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சனைகள் தன்னிடம் தெரிவித்தால் அதனை முன்நின்று மக்கள் பிரச்சனைக்காக செய்து தருவேன் என்றும், தற்போதைய இருக்கின்ற திமுக ஆட்சி மக்களின் தேவைகளை கவனம் செலுத்தி அதனை பூர்த்தி செய்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தமிழகத்திலே முதல் தொகுதியாக பொன்னேரி தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர தர பாடுபட தன் எப்போதும் முன் நிற்பேன் என்று இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்ஸ், வார்டு கவுன்சிலர்கள் அபூபக்கர், அருண் அரசு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story