கும்மிடிப்பூண்டி பஜாரில் அலைமோதும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்!

கும்மிடிப்பூண்டி பஜாரில் அலைமோதும் மக்கள்; கொரோனா பரவும் அபாயம்!
X

கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் குவிந்துள்ள பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி பஜாரில் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பஜார் பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் ஆங்காங்கே கடைகளுக்கு முன்பு குவிந்து வருகின்றனர்.

அப்போது பொதுமக்கள் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை அரசு கண்டுகொள்ளுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!