அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
X

அதானி துறைமுகத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி நடத்தினர்.

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் .

இந்நிலையில் ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பெரியபாளையம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியிலிருந்து ராமலிங்கபுரம் பகுதி வரை ஊத்துக்கோட்டை வட்டக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறு வழி சாலை திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் கொண்டு செல்லும் வலியுறுத்தி 34 கிராமங்கள் சென்று துண்டறிக்கை அளித்து இருசக்கர வாகனப் பிரச்சார விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா