கன்னிகைப்பேர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

கன்னிகைப்பேர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!
X

கும்பாபிஷேகம் நடந்த மாரியம்மன் கோவில் 

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அடுத்த 100 வார்த்தைகளுக்காக சேகரி கன்னிகைப்பேர் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம மக்கள் மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

இந்நிலையில்,இந்த கோவிலை விழா குழுவினர்களும்,கிராம பொதுமக்களும் புனரமைத்து இன்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.இதை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீ மகா கணபதி பூஜை,அணுக்சை, கோ பூஜை,கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம்,நவகிரக ஹோமம்,தனபூஜை, யாகசாலை நிர்மாணம்,ஸ்ரீ மாரியம்மன் பாதீவரங்கள், கிராம கரிகோலம்,வாஸ்து சாந்தி,பிரவேச பலி முதல் கால யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது.


பின்னர்,ஸ்ரீ மாரியம்மன் பிரதிஷ்டை செய்து அஷ்டப்பந்தனம் மருந்து சாற்றும் நிகழ்ச்சியும்,கலசங்கள் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இன்று காலை இரண்டாம் கால பூஜைகள், ஹோமம் தத்வார்சனை,நாடி,சந்தானம், மகாபூர்ணாகுதி,யாத்ராதானம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன் பின்னர், திருலோகநாதர் பட்டர் தலைமையில் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது.

காலை 10 மணிக்கு மாரியம்மன் மற்றும் உற்சவர் அம்மன் ஸ்ரீ போத்த ராஜா தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர்,மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களான பால், தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பீட்டர் வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது.


பின்னர் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர்,கோவில் அருகே அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு குழுவினர்களும், கன்னிகைப்பேர் கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.நாளை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags

Next Story