/* */

ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம்!

நெல்வாய் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம்!
X

நெல்வாய் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம்,நெல்வாய் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,இக்கோவிலை கிராம பொதுமக்கள்,விழா குழுவினர்கள் ஸ்ரீ திரௌபதி அம்மன்,தருமர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.சிற்ப வேலைகள் மற்றும் வர்ணம் பூசும் வேலைகள் மேற்கொண்டு புனரமைத்தனர். இந்நிலையில்,இக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.இதை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி மங்கள இசை முழங்க, வேதப்பாராயணம் வாசிக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 5-ம் கால பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யாத்ரா தானம் நடைபெற்றது.

இதன் பின்னர்,சுண்ணாம்புகுளம் குருபிரசாத் சர்மா தலைமையில் வந்திருந்த ஆறுபேர் கொண்ட வேத விற்பனர்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை மங்கள வாத்தியம் முழங்க பிரகாரப் புறப்பாடு கொண்டு வந்தனர். காலை 10.30 மணிக்கு விமான கோபுரம்,கொடிமரம்,மூலவர், பரிகார மூர்த்திகள் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.கோவில் வளாகத்தில் மதியம் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி மங்கள வாத்தியம் முழங்க, வான வேடிக்கையுடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.தாமோதரன்,பி.தனசேகர், ஆர்.வினோத்குமார்,ஜி.குப்பன்,ஆர்.குமார்,எஸ்.பிரகாஷ், பொன்னரசு,முனிவேல், கோபால்,வீரராகவன்,பிரபு மற்றும் கிராம பொதுமக்கள், விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இன்று முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில்,நெல்வாய், முக்கரம்பாக்கம், புதுப்பாளையம் காரணி,ஆரணி,கும்மிடிபூண்டி, எளாவூர்,ஆரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 11 Jun 2024 9:30 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 2. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 3. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை
 4. செய்யாறு
  எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
 5. கோவை மாநகர்
  சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
 6. அரசியல்
  ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
 7. இந்தியா
  மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
 8. கரூர்
  கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
 10. இந்தியா
  உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி