/* */

மறைந்த முன்னாள் எம்எல்ஏ படத்திறப்பு விழா..!

மறைந்த முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கி வேணுவின் படத்தை திமுக பொருளாளர் டி ஆர் பாலு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மறைந்த முன்னாள் எம்எல்ஏ படத்திறப்பு விழா..!
X

மறைந்த முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கி வேணுவின் படத்தை திமுக பொருளாளர் டி ஆர் பாலு திறந்து வைத்தார்

கும்மிடிப்பூண்டி கி.வேணு படத்தை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மறைந்த மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு ஆவார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும்,முன்னாள் திருவள்ளூர் மாவட்ட செயலாளராகவும்,முன்னாள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர் கடந்த மாதம் 20-ந் தேதி காலமானார்.இவரது மகன் கி.வே.ஆனந்தகுமார் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகள் உமாமகேஸ்வரி திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு படத்திறப்பு விழா மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அவரது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்தை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதன் பின்னர், எம்.வி.பேரடைஸ் திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் பின்னர், புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும்,கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கி.வே.ஆனந்தகுமார், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் வரவேற்றார்.திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும்,மாவட்ட பொறுப்பாளருமான ராணிப்பேட்டை காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூவிருந்தவல்லி ஆ,கிருஷ்ணசாமி,எழும்பூர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தி பேசினர்.

இந்நிகழ்ச்சியில்,மாநில, மாவட்ட,ஒன்றிய,பேரூர்,கிளை கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள் இ.ஏ.பி.சிவாஜி,பா.சே.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி,வெ.அன்புவாணன்,கே.வி.லோகேஷ், ஏன்னம்பாக்கம் சம்பத்,வக்கீல் வெங்கடாஜலபதி,டி.ஜே.ஜி.தமிழரசன்,மு.மணிபாலன்,டி.கே.சந்திரசேகர்,ஜான் பொன்னுசாமி,ஆ.சத்தியவேலு,தங்கம்முரளி, பரிமளம்,செல்வசேகரன்,ரமேஷ்ராஜ், பரிமளம்விஸ்வநாதன், ரவிக்குமார்,அறிவழகன்,பி.முத்து,டி.கண்ணதாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்,அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Nov 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!