பெரியபாளையத்தில் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி..

பெரியபாளையத்தில் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி..
X

பெரியபாளையத்தில் டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி மீது மற்றொரு டிராக்டர் ஏறியதில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகேயுள்ள கல்மேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்வது உண்டு.

அதன்படி, செங்கல்சூளையில் இருந்து மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக டிராக்டர்களில் தொழிலாளர்கள் பூச்சி அத்திப்பேடு நோக்கி சென்றுள்ளனர். அப்போது அழிஞ்சிவாக்கம் ஊராட்சி தண்டுமேடு பகுதியில் முன்னால் சென்ற டிராக்டரை மற்றொரு டிராக்டர் முந்த முயன்ற போது மோதியதில் டிராக்டரில் இருந்து திண்டிவனத்தை சேர்ந்த சேகர் என்ற தொழிலாளி கீழே விழிந்தாராம்.

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சேகர் மீது மற்றொரு டிராக்டர் ஏறி இறங்கியது. இதில் செங்கல் சூளை கூலி தொழிலாளி சேகர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரியபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல் சூளை நிர்வாகத்தின் அலட்சிய போக்கு காரணமாகவே தொழிலாளி உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சரக்கு வாகனங்களில் பொதுமக்களை அழைத்து செல்ல கூடாது என்ற விதி உள்ள போதிலும் செங்கல் சூளை நிர்வாகத்தினர் சரக்குகளை ஏற்றுவது போல ஆட்களை டிராக்டர் மற்றும் லாரியில் அழைத்துச் செல்கின்றனர் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய டிராக்டர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலரால் வழங்கப்படும் அனுமதி சான்று, வாகன காப்பீடு ஆகியவை இல்லாமல் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏறுபடுத்திய வாகனத்தை மாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இது போன்று முறை தவறி நடத்தும் செங்கல் சூளைகள் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கூலி தொழிலாளர்களின் உயிரை காக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்