கும்மிடிப்பூண்டி விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கும்மிடிப்பூண்டி விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X
விஜயகாந்த் பைல் படம்
கும்மிடிப்பூண்டி பகுதிகளில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம். டில்லி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மேற்கு ஒன்றியம் ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன் ஏற்பாட்டில் நெல்வாய், முக்கரம்பக்கம், பூவலம்பேடு, தானிபூண்டி, மாதர்பாக்கம், ராமச்சந்திராபுரம், பணத்தம்பேடு கண்டிகை ஆகிய பல்வேறு பகுதிகளில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம். டில்லி தலைமையில் பள்ளி சிறுவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுகோல் வழங்கப்பட்டது.

முன்னதாக கழகக் கொடியை ஏற்றி கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஏழை எளியவர்க அன்னதானமும் ஊனமுற்றோருக்கு உதவி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!