தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!

தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!
X

போராட்டம் நடத்திய விவசாயிகளை பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர்.

புது வாயிலில் சர்க்கரை ஆலைக்கு வழங்கிய நிலத்தில் தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே சர்க்கரை ஆலைக்கு வழங்கிய நிலத்தில் சிறு தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து போராட்டம் செய்த விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட புதுவாயல் கிராமத்தில் கடந்த 1994-ஆம் ஆண்டு சர்க்கரை ஆலை அமைப்பதற்காக அப்பகுதி விவசாயிகளிடம் தமிழக அரசு விவசாயிகளை பங்குதாரர்களாக சேர்ப்பதாக கூறி ஒரு சென்ட் நிலம் 1400 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் ஆன விலை நிலங்களை கையகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில் 30 ஆண்டுகள் ஆகியும் சர்க்கரை ஆலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் கூட தொடங்கப்படாத நிலையில் தமிழக அரசு திடீரென விவசாயிகளின் ஒப்புதல் இன்றி சட்டத்திற்கு புறம்பாக தனியார் சிப்காட் சிறு தொழில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் நிலம் சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதை அறிந்த விவசாயிகள் சர்க்கரை ஆலை அமைக்க வழங்கிய நிலத்தில் சிப்காட் சிறு தொழில் பங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது விவசாயிகளிடமிருந்து, பொது தேவைக்காக பெறப்பட்ட நிலத்தை 15 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தாவிட்டால் அதனை மீண்டும் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே வழங்க வேண்டும் என்ற விதிகளை மீறி அரசு நிலங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை ஏற்க முடியாது என்றும் தற்போது ஒரு சென்ட் நிலம் இரண்டு லட்ச ரூபாய் சந்தை மதிப்பு உள்ள நிலையில் தங்களிடம் இருந்து அடி மாட்டு விலைக்கு கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!