திருவள்ளூர் மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம்..!

திருவள்ளூர் மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம்..!
X

திருவள்ளூர் தனியார் மண்டபத்தில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டம்.

பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கத்தில் திமுக பி எல் ஏ.2 கூட்டம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற பி எல் ஏ.2 பாக முகவர் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ.கோவிந்தராஜன், தொகுதி பொறுப்பாளர் அரசு குமார் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம்,மற்றும் தெற்கு ஒன்றியம், ஊத்துக்கோட்டை பேரூர் திமுக சார்பில் பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பி எல் ஏ.2 ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன், கட்சியின் செய்தி தொடர்பு துணைத் தலைவர் தொகுதி பொறுப்பாளருமான அரசு குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் பேசிய சிறப்பாளர்கள் நாளை 5தேதி அன்று திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர் மைதானத்தில் நடைபெற உள்ள பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், இதில் கலந்து கொள்ள உள்ள பாக முகவர்களுக்கு அடையாள அட்டை டி ஷர்ட் போன்றவை வழங்கினார்.

இதில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ. மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு, ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல், நிர்வாகிகள் ஏவி,ராமமூர்த்தி,விபி, ரவிக்குமார், தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, எனம்பாக்கம் சம்பத், ஆரம்பாக்கம் ஆறுமுகம், உள்ளிட்ட மாவட்டம், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் என திரளான நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!