/* */

ஆவடியில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்

புயலால் பாதிக்கப்பட்ட ஆவடி சட்டமன்ற பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கினார்.

HIGHLIGHTS

ஆவடியில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
X

ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் பன்னீர் செல்வம், சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்.

சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக தூய்மை பணிகள் மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியில் ஆவடி மேயர் உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆவடி சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர்ருமான சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இதனை தொடர்ந்து கலைஞர் நகர் பகுதியில் பகுதி செயலாளர் பேபி சேகர் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய நிலையில் வரிசையில் நின்று பொது மக்கள் நிவாரண பொருட்களை பெற்று சென்றனர். ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஆவடி மாநகர ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், மாநகர செயலாளர் சண் பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பேபி சேகர், பொன் விஜயன், ராஜேந்திரன், பகுதி கழக செயலாளர்கள் பேபி சேகர், பொன் விஜயன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பெ.வினோத் வட்டச் செயலாளர் குமார், கோபால் மாமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Dec 2023 10:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்