பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
X

பாக்கம் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

பாக்கம் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேலு, மற்றும் திருவள்ளூர் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் , பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது குறித்து பொது மக்களுக்கு முறையான தகவல் அளிக்கப்படவில்லை எனவும், அதனால் தான் இந்த கிராம சபைக் கூட்டத்திற்கு குறைவான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர் எனவும் அதேபோல் பாக்கம் ஊராட்சியில் கிளார்க் இதுவரை நியமிக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் 100 நாள் வேலைவாய்ப்பு பணிபுரிய கட்டாயம் தண்ணீர் வரி செலுத்த என பாக்கம் ஊராட்சி அலுவகத்தில் கூறப்படுவதாகும் கூறி அரசு அதிகாரிகள் மற்றும் தலைவரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாக்கம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை இல்லை எனவும் இப்பகுதிக்கு தேவையான குடிநீர் வசதி சாலை வசதி, தெரு மின்விளக்கு, குப்பைத் தொட்டிகள் எதுவும் இல்லை. குறுகிய வீடுகள் உள்ள பகுதியில் 10 லட்சம் செலவு செய்து சாலைகள் வசதி ஏற்படுத்தியது ஏன் என சரமாரியாக கேள்வி கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா