திருவேற்காடு சிவன் கோயில் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி

திருவேற்காடு சிவன் கோயில் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி
X

திருவேற்காடு சிவன் கோயில் அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

திருவேற்காடு சிவன் கோயில் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் ஆங்காங்கே ரோடுகளில் மழைநீர் தேங்கியது வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசரின் அறிவுறுத்தலின்படி திருவேற்காடு நகர செயலாளர் என்.இ.கே மூர்த்தி தலைமையில் திருவேற்காடு சிவன் கோவில் சாலையில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கு கால்வாய் அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதில் வட்ட செயலாளர் மா. காந்தி மற்றும் திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai healthcare technology