ஆவடி அருகே அடகு கடை பூட்டை உடைத்து நகை கொள்ளை

ஆவடி அருகே அடகு கடை பூட்டை உடைத்து நகை கொள்ளை
X
ஆவடி அருகே அடகு கடை பூட்டை உடைத்து நகை கொள்ளை போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே அண்ணனூர், அடிப்பாளையம் தெருவில் வசித்து வருபவர் கான்சிராம்(25), இவர் அதே பகுதியில் அடகு கடை கடை ஒன்று நடத்தி வருகிறார். கான்சிராம் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து. நேற்று காலை கான்சிராம் மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அடகு வைத்திருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதற்கிடையே, அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பக்கத்து தெருவில் சிதறி கிடந்தது. அவற்றை அப்பகுதி மக்கள் எடுத்துவந்து அடகு கடை உரிமையாளர் கான்சிராம் இடம் கொடுத்துள்ளனர். பின்னர் கடைக்குள் அவர் பரிசோதித்தார். அதில், மூன்றரை சவரன் நகைகள் மற்றும் 1.கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மூலம் மர்ம நபர்கள் யார் என்பது ஆராய்ந்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது