ஆவடி: சாலையோரம் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுகவினர்

ஆவடி:  சாலையோரம் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுகவினர்
X
சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்கிய காட்சி.
ஆவடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு தமுமுகவினர் உணவு வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசின் சார்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சாலையோர வாசிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு தமுமுகவினர் உணவு வழங்கினர்.

கொரோனாவால் உதவியின்றி உணவில்லாமல் தவிக்கும் சாலையோர மக்களுக்கு ஆவடி தமுமுக தன்னார்வலர்கள் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வினியோகிக்கப்பட்டது.

இது, உதவியை எதிர்பார்த்து ஏங்கி இருந்த ஏராளமான மக்களுக்கு சற்று ஆறுதலாய் இருந்ததாகவும், ஏராளமான மக்கள் உணவின்றித் தவிப்பதால் மக்களின் பசியைப் போக்கிட மென்மேலும் உணவு ஏற்பாடு செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமுமுக நிர்வாகி தெரிவித்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா