ஆவடி: மோரையில் ஆரம்ப சுகாதார நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்!

ஆவடி: மோரையில் ஆரம்ப சுகாதார நிலையம்- அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்!
X

மோரை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் நாசர், அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

ஆவடி மோரை ஊராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தொகுதிக்குட்பட்ட மோரை ஊராட்சியில் 6 படுக்கை வசதிகளுடன் கூடிய ரூ. 75 லட்சம் மதிப்பிலான புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சா.மு. நாசர் தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் ஆஸ்பத்திரி கட்டிடம் முழுவதையும் பார்வையிட்ட அவர், அங்கு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதிகளையையும் ஆய்வு செய்தார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணியையும் தொடங்கி வைத்த அமைச்சர், முன்களப் பணியாளர்களிக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழச்சியில் ஜெயக்குமார் எம்.பி., மாதாவரம் எம்.எல.ஏ. சுதரசனம், கலெக்டர் பொன்னையா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஷ்வரி, மோரை ஊராட்சி தலைவர் திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil