ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு

ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழப்பு
X

பைல் படம்.

ஆவடி அருகே தண்டவாளத்தை கடக்கும்போது விரைவு ரயில் மோதி தூய்மை பணி மேற்பார்வையாளர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சே காடு, நாகராஜன் நகர் தெருவில் வசித்து வருபவர் ஆதி ஹரிஷ்,(24). இவர் ஆவடி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தவர் நேற்று வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டார்.

இந்த நிலையில், பட்டாபிராம் இந்து கல்லூரி அருகே ரயில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற விரைவு ரயில் இவர் மீது மோதியது. இதில் ஆதி ஹரிஷ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆதி ஹரிஷுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும். சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Tags

Next Story