/* */

புதுக்கோட்டையில் பனை விதைகள் நடும் நிகழ்வு: எம்பி அப்துல்லா தொடக்கி வைப்பு

தமிழக அரசு பனை மரங்கள் நடுவதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பனை விதைகள்  நடும் நிகழ்வு:   எம்பி அப்துல்லா தொடக்கி வைப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாபட்டியில் பனை விதைகள் நடும் நிகழ்வு துவக்கி வைத்த மாநிலங்களவை எம்பி எம்எம் அப்துல்லா

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3000 பனை விதைகள்நடும் நிகழ்வை திமுக் எம்பி அப்துல்லா தொடக்கி வைத்தார்.

தமிழக அரசு பனை மரங்கள் நடுவதற்கு பல்வேறு சலுகைகள் வழங்கி உள்ளது. தமிழகத்தில் வெளிநாட்டு மரங்களை அகற்றிவிட்டு நாட்டு மரங்களை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பொதுமக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் பனை விதை நடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ,புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி, கடியாபட்டி ஊராட்சி காடத்தான்பட்டி முள்ளுக்குண்டு கண்மாய் கரையில் புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் 3000 பனை விதைகள் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை திமுக உறுப்பினர்அப்துல்லா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில், கௌரவத் தலைவர் ஜெகன், நிறுவன தலைவர் கலைபிரபு, அறங்காவலர் அப்பாச்சாமி, அறங்காவலர் வடிவேலு, திருமயம் தொகுதி ஒருங்கினைப்பாளர் தமிழ் ஓவியம் மற்றும் விக்னேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், அரிமளம் தொகுதி பொறுப்பாளர் மணிகண்டன்.

அரிமளம் ஒன்றிய கவுன்சிலர் ரேகா கிருஷ்ணன், கடியாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி சோமசுந்தரம், கடியாபட்டி ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, ஆயிங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜமாணிக்கம், கடியாபட்டி கிராம நிர்வாக அலுவலர் பெருமாள், தோழர் சோலையப்பன், தோழர் கலியமுத்து,கடியாபட்டி அருண், கோரல் பவுன்டேஷன் ஜோதி மற்றும் காடத்தான்பட்டி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.



Updated On: 26 Sep 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு