திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழா..!

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழா..!
X

திருவப்பூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் (கோப்பு படம்)

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து அலகு வேல் குத்தியும் தீமிதிக்கும் பொங்கல் வைத்தும் நேத்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை திருக்கோவிலைச் சேர்ந்த இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தும் விதமாக பால் குடம் எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும் 15 அடி நீளம் உள்ள அழகுவேல் குத்தியும் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அதேபோன்று முத்து மாரியம்மன் ஆலயம் முன்பு பொங்கல் மற்றும் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பாலை பெரிய ட்ரெமில் ஊற்றி பின்னர் மோட்டார் மூலம் முத்துமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாளை தேர் திருவிழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
why is ai important to the future