/* */

நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்க அரசியல், இலக்கிய அமைப்புகள் கோரிக்கை

மருத்துவர் ஜெயராமன் எழுதிய நூலை வெளியிடுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டுமென பல்வேறு அரசியல் இலக்கிய அமைப்புகள் கோரிக்கை

HIGHLIGHTS

நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்க அரசியல், இலக்கிய அமைப்புகள் கோரிக்கை
X

பைல் படம்

நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்க அரசியல், இலக்கிய அமைப்புகள் கோரிக்கை

புதுக்கோட்டை எழுத்தாளர் மருத்துவர் நா.ஜெயராமன் எழுதிய நூலை வெளியிடுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டுமென புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு அரசியல் மற்றும் இலக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுக்கோட்டையில் அபெகா பண்பாட்டு இயக்கத்தை நடத்தி வருபவர் மருத்துவர் நா.ஜெயராமன். இவர் கடந்த காலங்களில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக தான் எழுதிய 'சாதி-கக்கூஸ்-கோவில்' என்ற நூலை கடந்த டிச. 30 அன்று வெளியிட திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் சில இந்துத்துவ வாதிகளின் எதிர்ப்பை அடுத்து காவல்துறை நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு 32 அரசியல் மற்றும் இலக்கிய அமைப்புகள் ஒன்று கூடி கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவர் நா.ஜெயராமனின் நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திமுக மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், காங்கிரஸ் நகரத் தலைவர் இப்ராஹிம் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திலீபன், அரங்க குணசேகரன், விடுதலைக்குமரன், தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் ராசி.பன்னீர்செல்வன், எம்.ஸ்டாலின் சரவணன், கி.ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 31 Dec 2023 4:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  5. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  7. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  10. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...