பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம் தொடக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அசூர் கிராமத்தில் சுகாதார துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ சேவை திட்டம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமை தாங்கினார். இவ்விழாவில் தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மருத்துவ முகாமினை பார்வையிட்டார்.

இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்.இந்நிகழ்வில் வருவாய் கோட்டாச்சியர் நிறைமதி ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன்,ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப் பிள்ளை மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story