பெரம்பலூரில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெரம்பலூரில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

பெரம்பலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலை பேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்தும், உங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!