T23 புலி இப்போது எப்படி இருக்கு? உதகையில் வனத்துறை அமைச்சர் விளக்கம்

T23 புலி இப்போது எப்படி இருக்கு? உதகையில் வனத்துறை அமைச்சர் விளக்கம்
X
மைசூர் வன விலங்கு மறுவாழ்வுமையத்தில்உள்ள T23 புலியின்உடல்நிலை நன்றாக உள்ளதாக, வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்து கொண்டார். பின்னர் இலவச மின்சாரத்திட்டத்திற்காக 9 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கா.ராமசந்திரன், நீலகிரி மாவட்டத்தில் ஆழ்த்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிணறு தோண்ட எந்த தடையும் இல்லை. மைசூர் வன விலங்கு மறு வாழ்வு மையத்தில் உள்ள T23 புலியின் உடல் நிலை நன்றாக இருக்கிறது. காயங்கள் குணமடைந்து வருகிறது.

தற்போது, அந்த மையத்தில் உள்ள சிறிய வன பகுதியில் ஆட்கொல்லி புலி விடபட்டுள்ளது. முழுவதும் குணமடைந்த பின்னர் தேசிய புலிகள் ஆணையத்தின் ஆணைப்படி பரிசீலிக்கபட்டு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வருவதா? அல்லது மைசூரிலேயே வைத்து பராமரிப்பதா? என்பது குறித்து முடிவு செய்யபடும் என்றார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil