கொல்லிமலையில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கொல்லிமலையில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

கொல்லிமலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

கொலிலிமலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 467 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

கொலிலிமலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 467 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள, நத்துக்குழிபட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வருவாய்த்துறையின் சார்பில் 61 பயனாளிகளுக்கு சாதிச்சான்று பெறுவதற்கான உத்தரவுகளையும், ரூ.12 லட்சம் மதிப்பில் 92 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 2 முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகையாக மாதம் ரூ.1000/- பெறுவதற்கான உத்தரவுகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000/- பெறுவதற்கான உத்தரவையும், ரூ.60,000/- மதிப்பில் 5 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவுகளையும், 8 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டுகளையும் வழங்கினார்.

மேலும் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மண் வள அட்டைகளையும், ஒருவருக்கு உயிரியல் காரணிகளையும், 4 பேருக்கு சிறுதானிய விதைகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரூ.18,120/- மதிப்பில் 4 பயனாளிகளுக்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட தொகையும், ரூ.30,000/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு கிராம்பு, மிளகு விதைகளையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.13,125/- மதிப்பில் 2 பயனாளிகளுக்கு மல்பெரி நடவு மானியம் வழங்கினார். பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 183 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மொத்தம் 467 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் குண்டூர் நாடு கிராமத்தில் ரூ. 14.30 லட்சம் மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கவும், ரூ.12.60 லட்சம் மதிப்பில் இலங்கியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்று சுவர் அமைக்கவும், ரூ.13.65 இலட்சம் மதிப்பில் நத்துக்குழிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சுற்று சுவர் அமைக்கவும் என மொத்தம் ரூ.30.55 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளுக்கு நிர்வாக அனுமதியினையும் கலெக்டர் வழங்கினார். முன்னதாக அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார். முகாமில் திட்ட இயக்குநர் சிவக்குமார், நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்