விஏஓ.,க்கள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் வசிக்கக் கோரி கொல்லிமலையில் ஆர்ப்பாட்டம்

விஏஓ.,க்கள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் வசிக்கக் கோரி கொல்லிமலையில் ஆர்ப்பாட்டம்
X

கொல்லிமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஏஓக்கள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் வசிக்கக் கோரி கொல்லிமலையில் 6 இடங்களில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஏஓக்கள் சம்மந்தப்பட்ட கிராமங்களில் வசிக்கக் கோரி கொல்லிமலையில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொல்லிமலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, கொல்லிமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொல்லிமலையில் உள்ள அனைத்து விஏஓக்களும், தங்களின் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும். கொல்லிமலையில் ரீ-சர்வேயில் (மறு தணிக்கையில்) ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்த பின்னர் கம்ப்யூட்டரில் பதிவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2006 வன உரிமைச்சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு உடனடியாக அனுபவச் சான்று வழங்கிட வேண்டும்.

சேலூர் நாடு வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி வரை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக சரி செய்து தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்ணனூர் நாடு ஊர்புறம் முதல் திட்டகிராய்ப்பட்டி வரை புதிய தார் சாலை அமைக்க வேண்டும். தேவானூர் நாடு, செங்காட்டுப்பட்டிக்கு தார் சாலை குடிநீர், தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும். தேவானூர் நாடு வான்னாபாறை முதல் கட்டகாட்டுப்பட்டி வரை தார் சாலை அமைத்து தரவேண்டும். வாழவந்திநாடு செம்மேடு முதல் சீக்குப்பாறை வியூ பாயிண்ட் வரை தார் சாலை சீரமைக்க வேண்டும்.

கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு நவீன மருத்துவ கருவிகள் வழங்கி போதுமான டாக்டர்கள் மற்றும் நர்சுகளை நியமிக்க வேண்டும். கொல்லிமலையில் செம்மேடு முதல் செம்மேடு வரை செல்லக்கூடிய வகையில் பஸ் வசதி, அரசு கலைக்கல்லூரி, பொது விளையாட்டு மைதானம், கலை அரங்கம், பயிர் ஆராய்ச்சி மையம். செல்போன் டவர் இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் உடனடியாக செல்போன் டவர் அமைக்க வேண்டும்.

வாழவந்தி, நடுசோளக்காடு வார சந்தையை வழக்கம்போல் கூட்டிட நடவடிக்கை எடுக்கவும் சேலூர் நாடு மணப்பாறை வார சந்தையை முறையாக செயல்படுத்த வேண்டும். சோளக்காடு ,செம்மேடு, அரப்பளீஸ்வரர் கோயில் பகுதிகளில் உள்ள கழிவறையை முறையாக பராமரித்து தண்ணீர் வசதி செய்து கொடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொல்லிமலையில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாழவந்தி நாடு, செம்மேடு பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ (எம்) கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். திண்ணனூர் நாடு வாசலூர்பட்டி விஏஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் மாணிக்கம் தலைமை வகித்தார். சேலூர் நாடு, அடுக்கம்பட்டி பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் துரைசாமி தலைமை வைத்தார்.

தேவனூர்நாடு செங்காட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சின்னப்பையன் தலைமை வகித்தார். வளப்பூர் நாடு ஓலையாறு விஏஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சிவன் தலைமை வகித்தார்.

சேலூர் நாடு மணப்பாறை சந்தை விஏஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். போராட்டங்களில் கட்சியின் மூத்த மற்றும் முன்னணி தலைவர்கள் ஆண்டி, பாலையா, பன்னீர்செல்வம், ரேவதி, சின்னையன், மணி, பழனிசாமி, கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்