மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 68.77 லட்சம் நலத்திட்ட உதவி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 68.77 லட்சம் நலத்திட்ட உதவி
X

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் உமா வழங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் உமா வழங்கினார்

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 17 பயனாளிகளுக்கு ரூ.68.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் உமா வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 386 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அவற்றை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.83,500 மதிப்பில், ரூ.4,17,500 மதிப்பில் 4 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு டிராக்டர் மற்றும் பயணியர் வாகனம் வாங்க ரூ.29,09,120 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் சார்பில் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.33 லட்சம் வங்கி கடன் உதவியும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் தலா ரூ.1 லட்சம் மதிப்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் நிவராண உதவித் தொகையினையும், ரூ.50 ஆயிரம் மதிப்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா உத்தரவையும், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் மெசின்கள், என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.68.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது