ராசிபுரம், சேந்தமங்கலம், புதுச்சத்திரம் பகுதிகளில் திட்டப்பணிகள் : எம்.பி. துவக்கம்..!
சேந்தமங்கலம் அருகே, துத்திக்குளம் தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக பழங்குடியினர் கல்லூரி மாணவியர் விடுதியை ராஜேஷ்குமார் எம். பி. திறந்து வைத்தார்.
நாமக்கல்:
ராசிபுரம், சேந்தமங்கலம் மற்றும் புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.60 லட்சம் மதிப்பில் சுகாதார நிலையம் கட்டும் பனி துவக்க விழா மற்றும் 4 முடிவுற்ற பணிகள் துவக்க விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், மலையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 புதிய வகுப்பறைகளை, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். இதன் மூலம் 21 மாணவர்கள் பெறுவார்கள். தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II ன் கீழ், ரூ.10.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் இடுப்பொருள் வைப்பு கிடங்கினை அவர் திறந்து வைத்தார்.
மேலும், குருக்கபுரம் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II ன் கீழ், ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் 350 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடையினை எம்.பி. ராஜேஷ்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து, புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், செல்லப்பம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ், ரூ.19.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். முதலைப்பட்டியில் 15-வது மத்திய நிதி ஆணையம் மற்றும் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ், ரூ.60.00 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிக்கு எம்.பி. ராஜேஷ்குமார் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், துத்திக்குளம், தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிக பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதியினை திறந்து வைத்தார். சேந்தமங்கலம் வட்டம், வெட்டுக்காடு, அரசு கலை கல்லூரியில் பயிலும் பழங்குடியினர் மாணவியர்கள் 100 பேர் தங்கி பயிலுவதற்கு ஏதுவாக, அரசு விடுதி கட்டடம் கட்டப்படும் வரை தற்காலிகமாக இங்கு தங்கி, கல்லூரிக்கு சென்று வரலாம். இந்த மாணவியர் விடுதி இன்று முதல் செயல்படவுள்ளது
நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சித்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றி தலைவர் ஜெகநாதன், அட்மா குழுத் தலைவர் அசோக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார், கூட்டுறவு சங்க இணைபதிவாளர் .அருளரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu