நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகா அலுவலகங்களிலும் நாளை முதல் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
1432-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாளை 24ம் தேதி முதல், தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
- சேந்தமங்கலம் தாலுக்காவில் 24ம் தேதி முதல் ஜூன் 1 வரை நடைபெறும் ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்கிறார்.
- குமாரபாளையம் தாலுகாவில் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறும்.
- நாமக்கல் தாலுகாவில் 24ம் தேதி முதல் ஜூன் 2 வரை சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறும்.
- ராசிபுரம் தாலுகாவில் 24ம் தேதி முதல் ஜூன் 1 வரை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறும்.
- கொல்லிமலை தாலுகாவில் 24ம் தேதி மற்றும் 25ம் தேதி கலால்துறை உதவி கமிஷனர் தøமையில் ஜமாபந்தி நடைபெறும்.
- மோகனூர் தாலுகாவில் 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறும்.
- திருச்செங்கோடு தாலுகாவில் 24ம் தேதி முதல் ஜூன் 7 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஜமாபந்தி நடைபெறும்.
- பரமத்தி வேலூர் தாலுகாவில் 24ம் தேதி முதல் ஜூன் 2 வரை திருச்செங்கோடு ஆர்டிஓ தலைமையில் ஜமாபந்தி நடைபெறும்.
அரசு விடுமுறை, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை நீங்கலாக மற்ற அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெறும். நிகழ்ச்சியில், அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று, ஜமாபந்தி அலுவலரால் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை நிவர்த்தி செய்ய உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu