சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடக்கோரி விவசாயிகள் பொங்கல் பரிசு புறக்கணிப்பு..!

சிப்காட் தொழிற்பேட்டை திட்டம் கைவிடக்கோரி விவசாயிகள் பொங்கல் பரிசு புறக்கணிப்பு..!
X

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, வளையப்பட்டியில் திரளான விவசாயிகள், காதில் வெற்றிலையை சுற்றிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் அருகே, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, வளையப்பட்டியில் திரளான விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடக்கோரி பொங்கல் பரிசு புறக்கனிப்பு : விவசாயிகள் அறிவிப்பு

நாமக்கல் :

மோகனூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு மற்றும் ரூ. 1000 ரொக்கத்தை புறக்கனிப்போம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, வளையப்பட்டி, புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், 700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அதற்கான நிலத்தை, அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

அப்பகுதியில் தொழிற்பேட்டை அமைந்தால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி, அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை அரசு கைவிட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஒருங்கிணைந்து சிப்காட் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பை துவக்கி, இதுவரை 47 போராட்டங்களை நடத்தியுள்ளனர்.


சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கைவிடக்கோரி, சிப்காட் எதிர்ப்புக்குழு சார்பில் 48வது கட்ட போராட்டம் வளையப்பட்டியில் நடைபெற்றது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். கொமதேக மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், எதிர்ப்பு இயக்க பொறுப்பாளர்கள் சரவணன், பழனிவேல், தண்டபாணி, ரவி உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி கோஷமிட்ட விவசாயிகள், பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ. 1,000 பணத்தை இப்பகுதிய விவசாயிகள் வாங்க மாட்டோம் என அறிவித்தனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி