மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர்கள் சங்க கூட்டமைப்பினர் பணி நீட்டிப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 1,646 சுகாதார ஆய்வாளர்கள் பணியினை நீட்டிக்க வலியுறுத்தியும், காலிப்பணி இடங்களை நிரப்ப வலியுறுத்தியும், சென்னையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் மயிலாடுதுறை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜாராமன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!