திமுக வேட்பாளரின் சகோதரர் அதிமுகவில் ஐக்கியம்

திமுக வேட்பாளரின் சகோதரர் அதிமுகவில் ஐக்கியம்
X

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மூத்த மகனும் திருமங்கலம் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போட்டியிடுகிறார். திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் சேடப்பட்டி முத்தையா மூத்த மகனும் திமுக வேட்பாளர் மணிமாறனின் சகோதரருமான அறிவழகன் அதிமுக வேட்பாளர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது எனது தந்தையும் சகோதரரும் திமுக எனும் சேற்றில் விழுந்து எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளனர்.திமுகவின் கொள்கைகள் எனக்கு பிடிக்காத காரணத்தினால் தற்போது அதிமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன்.

திருமங்கலம் தொகுதியை பொறுத்தவரை ஆர் பி உதயகுமார் வெற்றி உறுதியாகிவிட்டது. அவரை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க நாளை முதல் பிரசாரம் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
Similar Posts
சோழவந்தானில் கல்லறைத் திருவிழா: கிறிஸ்தவர்கள் வழிபாடு..!
மதுரையில் மீண்டும் பலத்த மழை: தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
மதுரை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை வேளாண்மை துறை அதிகாரி ஆய்வு
சோழவந்தான் நகரில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்!
வெறும் 644 ரூபாய் மாச செலவுல! 64எம்பி கேமராவோட 5ஜி ஃபோன்!
மதுரை செல்லூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
தீபாவளி 2024: புதிய மெஹந்தி டிசைன்ஸ்
ஊழியர்களுக்கு ரிலையன்ஸ் வழங்கிய அற்புத பரிசு பெட்டகம்..! அனைவரும் மகிழ்ச்சி..!
தீபாவளி வந்தாச்சா...!வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் வாழ்த்து சொல்வோம் வாங்க...!
குழந்தைய தூக்கிட்டே நிக்கிறீங்களா? கை வலிக்காம இருக்க சூப்பர் ஐடியா! வேணும்னா வாங்கிக்கோங்க பாதிவிலைதான்!
வாடிப்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!
ஃபோன் ரீசார்ஜ் விலை குறையுதா? பயனர்களுக்கு நல்ல செய்தி வருதுடோய்..!
இந்திய சந்தையில் புயல் கிளப்பும் ஒப்போ ஏ3எக்ஸ் 4ஜி!
ai in future agriculture