வாடிப்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!

வாடிப்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!
X

விலையில்லா மிதிவண்டி பெற்றுக்கொள்ளும் மாணவன் 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே வாடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கி 113 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

உதவித் தலைமை ஆசிரியர் விஜயரங்கன் வரவேற்றார். இதில், முன்னாள் மாணவர்கள் வினோத், மருது பாண்டி, நாட்டு நல பணி திட்ட பொறுப்பாளர் பாலமுருகன், ஆசிரியர்கள் சுரேஷ்,ஜெயகவுசல் யா, சகுந்தலா தேவி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியர் கலாவதி நன்றி கூறினார்.

தமிழக அரசு மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கு, அவர்கள் எளிதாக வந்து செல்வதற்கும் விலையில்லா மிதி வாந்திகளை வழங்கி வருகிறது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு இந்த மிதிவண்டி வழங்கும் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!