12 மாவட்ட காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் மனு

12 மாவட்ட காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் மனு
X
சமூக வலைதளங்களில் வரும் பொய்யான தகவல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல் நிலையத்தில் அதிமுகவினர் புகார் மனு அளித்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பி வருவதை கண்டித்து நடவடிக்கை கோரி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் 12 மாவட்டங்களில் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இரண்டாம் அலையில் தொற்று அதிகமாகி நோய் தொற்று காரணமாக அதிகமாக பலியாகின்றனர். மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசின் இந்த அவல நிலையை திசைதிருப்பும் வகையில் முன்னாள் முதலமைச்சர் மீது அவதூறு பிரச்சாரத்தை வலைத்தளங்களில் செய்து வருகின்றனர்.

கடந்த 22ஆம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் வந்த தகவல் என ஒரு தகவல் வலைதளங்களில் வந்தது. அதில் முதல்வருக்கு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை என்ற தலைப்பில் நாங்கள் தாயில்லா பிள்ளைகள் எங்கள் மீது ஊழல் வழக்குகள் போடுவதை முதல்வர் ஸ்டாலின் தவிர்க்க வேண்டும் என்று வெளிவந்துள்ளது.

வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி ஒரு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கழக ரீதியில் உள்ள சேலம், நாமக்கல் ,கரூர், மதுரை மாநகர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் நிர்வாகிகள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

மதுரையில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் மணிகண்டன் சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திலும் ,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கௌரிசங்கர் மேலூர் காவல் நிலையத்திலும் புகார் மனு கொடுத்துள்ளனர் என்று கூறினார்.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?
பண்டிகைகள் காரணமாக 3 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்
ai in future agriculture