கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 427 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 427 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி முகாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 427 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

கொரோனா தொற்று மூன்றாவது அலை ஏற்படும் முன் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி வாரம்தோறும் ஞாயிறு கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் அமைத்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களுக்கு தடுப்பது செலுத்தப்படுகிறது .

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்காவது சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அங்கன்வாடி அரசு பள்ளி என மொத்தம் 427 மையங்களில் நடைபெறும் முகாமில் 41 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Tags

Next Story