கர்நாடக மாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!

கர்நாடக மாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!
X
கைது செய்யப்பட்ட கவின் குமார்.
தாளவாடி அருகே கர்நாடக மாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தாளவாடி அருகே கர்நாடக மாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் ஆசனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளேகால் பிரிவு சாலை பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வன் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் போலீசார் கொள்ளேகால் பிரிவு சாலை அருகில் வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில், வாகனத்தில் மூட்டைகளில் 520 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் சித்தனஹள்ளி பகுதியைச் சேர்ந்த கவிக்குமார் (வயது 54) என்பதும், கேர்மாளம், உடையார்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மாநிலத்தில் விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, கவின்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 520 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!