கீழ்வாணி ஊராட்சியில் நாளை (அக்.2) கிராம சபை கூட்டம்

கீழ்வாணி ஊராட்சியில் நாளை (அக்.2) கிராம சபை கூட்டம்
X

பைல் படம் 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கீழ்வாணி ஊராட்சியில் நாளை காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, ஜனவரி), தொழிலாளர் தினம் (1, மே), சுதந்திர தினம் (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது

கிராம சபைக் கூட்டதின் நோக்கம் என்பது ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தல் ஆகியவையே

கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் என்பது கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம் ஆகும்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக, அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்வாணி ஊராட்சியில் நாளை காலை 11 மணிக்கு பிரகாஷ்நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், ஊராட்சி தணிக்கை அறிக்கை பெறுதல், 100 நாள் வேலை திட்ட அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.எனவே ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தாமாகவே முன் வந்து கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்யலாம் என ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!