ரூ.1‌.54 கோடியில் தார் சாலை பணியினை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ

ரூ.1‌.54 கோடியில் தார் சாலை பணியினை துவக்கி வைத்த அந்தியூர் எம்எல்ஏ
X

சின்னசெங்குளம் முதல் பெரியசெங்குளம் வரை தார் சாலை அமைக்கும் பணியினை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ரூ.1.54 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கோவில் நத்தம் முதல் பெரியசெங்குளம் வரை செல்லும் சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக இருந்ததால், அதனை புதுப்பித்து தர வேண்டுமென அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர்.


அதன் அடிப்படையில் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவில்நத்தம் முதல் சின்னசெங்குளம் வரை ரூ.60 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பீட்டிலும் , சின்ன செங்குளம் முதல் பெரிய செங்குளம் வரையில் ரூ.94 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1 கோடியை 54 லட்சம் மதிப்பீட்டில் சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, தார் சாலை அமைக்கும் பணியினை மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினரும், அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஏ.ஜி.வெங்கடாசலம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எம்.நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!