ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; ஈரோடு மாவட்டத்தில் 47,584 விவசாயிகள் பயன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் 47 ஆயிரத்து 584 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23.5.2022 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 2021- 22ம் ஆண்டு 60 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 48 தரிசு நிலத் தொகுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அனைத்திலும் நிலநீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு சாத்தியமுள்ள தரிசு நிலத் தொகுப்புகளில் 11 ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, இலவசமாக மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டு சொட்டுநீர்ப் பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வேளாண்மை- உழவர் நலத்துறையின் மூலம் ரூ.64.10 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இலவச தென்னங்கன்றுகள், மானிய விலையில் வரப்பில் பயறுவகை பயிர்களுக்கான விதைகள், விசைத் தெளிப்பான்கள், தார்பாலின், பண்ணைக் கருவிகள் ஆகியவை வழங்கப்பட்டன. 15,780 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2022- 23ம் ஆண்டு 44 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 20 தரிசு நிலத் தொகுப்புகள் அமைக்கப்பட்டு நிலநீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், சாத்தியமுள்ள 9 தொகுப்புகளின் ஆழ்துளைக் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரூ.31.9 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இலவச தென்னங்கன்றுகள், மானிய விலையில் திரவ உயிர் உரங்கள், விசைத் தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 16,500 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2023- 24ம் ஆண்டில் 42 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இதுவரை 6 தரிசுநிலத் தொகுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, நிலநீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.36.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இலவச தென்னங்கன்றுகள் வழங்குதல், மானிய விலையில் திரவ உயிர் உரங்கள் வழங்குதல், விசைத்தெளிப்பான்கள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. 15,304 விவசாயிகள் இதுவரை பயனடைந்துள்ளனர்.
பெருந்துறை வட்டாரத்தில் 26.58 ஏக்கர் பரப்பளவில் 2021-22ம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட நிச்சாம்பாளையம் கிராம தரிசு நிலத்தொகுப்பு விவசாயிகள் சாமிக்கண்ணு, மாரிச்சாமி, வேல்முருகன், மல்லநாயக்கர், வெங்கடாசலம், கோபால் ஆகியோர் தெரிவித்ததாவது, நிச்சாம்பாளையம் கிராம பஞ்சாயத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், எங்கள் பகுதியைச் சார்ந்த சுமார் 32 விவசாயிகளின் 26.58 ஏக்கர் தரிசுநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுப்பாக பதிவு செய்யப்பட்டு, எந்தவித விவசாயப் பணிகளும் நடைமுறைப்படுத்த இயலாத நிலத்தினை விவசாயத்திற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.திட்ட த
எங்கள் நிலத்தில் உள்ள முட்புதர்களை நீக்கி தண்ணீர் கிடைக்கும் இடத்தினைக் கண்டறிந்ததுடன் இல்லாமல், அரசாங்கமே ரூ.6,48,347- செலவில் போர் (ஆழ்துளைகிணறு) மற்றும் ரூ.5,50,000- செலவில் இலவசமாக மின்சாரம் அமைத்துக் கொடுத்தனர். மேலும், இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேளாண் துறையைச் சார்ந்தவர்கள் களப்பணிகள் மேற்கொண்டு ரூ.4,40,745- மதிப்பில் சொட்டு நீர்ப்பாசன வசதியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். தற்போது எலுமிச்சை போன்ற பழப்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இக்கன்றுகளும் இலவசமாக எங்கள் தோட்டத்திற்கே தோட்டக்கலைத் துறையினரால் கொண்டு வந்து தரப்பட்டன.
முதலமைச்சரின் இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் எங்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையில் தரிசாக இருந்த இந்நிலத்தில் பழமரப் பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக நிலக்கடலை, பொறியல் தட்டை, பருத்தி, வெண்டை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்து வருகிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இத்திட்டத்தின் மூலம் எங்களுக்கு வேளாண்மையில் நம்பிக்கை ஏற்படுத்திய முதலமைச்சருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu