நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் காக்க கலெக்டரிடம் மனு

நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் காக்க கலெக்டரிடம் மனு
நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக திருவிழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நாடக நடிகர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா காலங்கள் தொடங்கியுள்ள நிலையில், வரும் 10-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் திருவிழாக்காலங்களில் வாழ்வாதாரத்தை இழந்து உள்ள நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா கட்டுப்பாட்டில் கலைநிகழ்ச்சிகளுக்கு தளர்வு அளித்து, விதிகளுக்கு உட்பட்டு நாடக கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து நாடக நடிகர்கள் கூறும்போது, கட்டுப்பாடுகள் தளர்வு ஏற்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டால் பேரிடர் நிவாரணமாக கலைஞர்கள் அனைவருக்கும் மாதம் தலா பத்தாயிரம் ரூபாய் உதவி வழங்கிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story