ஆனைமலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : ஆட்சியர் ஆய்வு..!

ஆனைமலையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : ஆட்சியர் ஆய்வு..!
X

ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி இருந்து, கள ஆய்வுகளில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதன்படிதமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்களின் குறைகளை கண்டறிந்து, குறைகளை களைய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த திட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் இன்று காலை இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி துவக்கி வைத்தார்.

பின்னர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி ஆனைமலை தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகள் மனுக்களாக பெறப்பட்டு, முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள பிரிவிற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் ஆனைமலை அண்ணாநகர் அங்கன்வாடியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். அப்போது அங்கு குழந்தைகளுக்கு பரிமாறும் சத்து மாவை சாப்பிட்டு பார்த்தார். மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையை எடுத்து எடை பார்த்தார். மேலும் பொதுமக்களிடம் குறைகள் குறித்த மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். இதையடுத்து ஆனைமலை தாலுகா அலுவலகத்திற்கு சென்ற ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, அங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!