அரசு வேலை வாங்கித் தருவதாக 22 லட்சம் மோசடி: 3 பேர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக 22 லட்சம் மோசடி: 3 பேர் கைது
X
கைது செய்யப்பட்டவர்கள்
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவை மாவட்டத்தில் மேலும் 9 பேரிடம் மொத்தம் ரூ.22,55,000/- ஏமாற்றியது தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த கருவூரை சேர்ந்த சாய் ஸ்ரீ, அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். அப்போது அவரது மகன் வேலை இல்லாமல் இருப்பதை அறிந்த அவர்கள், நாகராஜிடம் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

மேலும் அரசு வேலையில் சேர்வதற்கு அதிகாரிகளிடம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளனர். அதனை நம்பி நாகராஜ் அவர்களிடம் ரூ.1,60,000/- பணத்தை கொடுத்து உள்ளார். ஆனால் அவர் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது.

இது குறித்து நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததின் பேரில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின்படி மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் சாய் ஸ்ரீ அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோர்களை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவை மாவட்டத்தில் மேலும் 9 நபர்களிடம் மொத்தம் ரூ.22,55,000/- ஏமாற்றியது தெரியவந்தது.

இது மட்டுமன்றி பிற மாவட்டங்களிலும் பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. எனவே மேற்படி மூன்று நபர்களை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!